தமிழ்நாடு: தமிழகத்தில் தற்போது கரீப் பருவத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய் யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் நடப்பு கரீப் பருவத்தில் 1,300 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பட்டு, இதுவரை 14 லட்சத்து 91 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டப் பகுதிகளிலேயே நெல் கொள்முதல் செய்வதற்கு சிறப் பான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஒரு குவின் டாலுக்கு 1,050 ரூபாய் என வெளிச்சந்தை விலையைவிட கூடுதலாக தமிழக அரசு வழங்குவதால் தான், பிற மாவட்டங்களிலும் கணிசமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஓரிரு கொள் முதல் நிலையங்களில் தவறுகள் நிகழும் போது உடனே கண்டறியப்பட்டு, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்ட முறை கேடுகளுக்காக 50 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. கொள்முதல் நிலையங்கள் கிராமப் பகுதிகளில் இயங்குவதால் வெளி நபர்களின் நடமாட்டங்கள் இருப்பின் கிராம மக்களே கண்டறிந்து இதுகுறித்த புகார்கள் தரவும் தயங்குவதில்லை.
விவசாயிகள் கொள் முதல் நிலையத்திற்கு நெல்லை விற்பனைக்குக் கொண்டு வரும் போது யாருக்கும் பணம் தரவேண்டியதில்லை. மேற் கண்ட நிலையங்களில் கமிஷன் புரோக்கர்கள் இருந்தால், உடனடியாக மாவட்டக் கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.