பொதுவில் கடந்த ஐந்து வார உயர்வினை தக்க வைக்கும் வாரமாக இந்த வாரம் அமையும்
வெற்றிகரமான ஐந்து வாரங்களை பூர்த்தி செய்து ஆறாவது வாரத்தில் நுழையும் காளைகள்.
இந்த வாரம் முதல் கடந்த நிதியாண்டு இறுதி முடிவுகள் வெளியாகத் துவங்கும்
எதிர்வரும் புதன்கிழமையன்று வெளியாகும் INFOSYS நிறுவன முடிவுகள் சந்தையின் அடுத்தகட்ட நகர்வினை தீர்மானிக்கும்.
பொதுவில் கடந்த ஐந்து வார உயர்வினை தக்க வைக்கும் வாரமாக இந்த வாரம் அமையுமென எதிர்பார்க்கிறேன். தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டியில் 3412 மிக முக்கியமான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகள் உடைபடுமாயின் அடுத்த இலக்கு 3484 இருக்கும்.
வெளியாகவிருக்கும் ஆண்டிறுதி முடிவுகளின் மீதான எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருப்பது, காளைகளுக்கு பெரிய அளவில் உதவுமென்றே எதிர்பார்க்கிறேன்.இதனால் மோசமான முடிவுகள் பெரிய அளவில் பாதகமான தாக்கத்தை ஏற்படுதாத வேளையில் ஓரளவிற்கு நல்ல முடிவுகள் பெரிய அளவில் சந்தைகளை முன் நகர்த்தும்.
சர்வதேச சந்தைகளை பொறுத்தவரையில் அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து வலுவாகவே காணப்படுகின்றன. Dow Jones 8400 வரையிலும் தடையேதுமின்றி உயருமென எதிர்பார்க்கப்படுவதால் அதனையொட்டியே சர்வதேச சந்தைகள் நகரும் வாய்ப்புகள் இருக்கின்றன.
கடந்த ஐந்து வார உயர்வுகளுக்குப் பின்னால் ஒரளவிற்கு வலுவான ஒரு Correction…ஐ கொண்டுதரும் என்பது நுட்ப ஆய்வுகளில் கடந்த கால அனுபவம். அதனையொட்டி இந்த வாரத்தில் ஒரு சரிவு வருமாயின் தேசிய நிஃப்டி. 3160 வரையிலும் கீழிறங்கிடும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்
சென்ற நிதி ஆண்டில் (2008-09) ஏற்றுமதி இலக்கு 200 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இலக்கு 175 பில்லியன் டாலாரக குறைக்கப்பட்டது.
இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் சந்தையின் துவக்கம் முழுக்க முழுக்க ஆசிய சந்தைகளையொட்டியே அமையும். தேசிய நிஃப்டியில் பின்வரும் நிலைகளில் கவன்மாயிருங்கள்.